Friday, 30 October 2015
Wednesday, 2 September 2015
துணை நிலா - கவிதை
என் குறும்பை காட்டிட
அருகே தங்கை இல்லை . . .
நாட்டு நடப்பினை
விவாதம் வைத்திட
பக்கம் தந்தை இல்லை . . .
நான் சொல்லாமலே
என் எண்ணங்களை படித்திட
நான் அன்னை மடியில் இல்லை . . .
விடுமுறையன்று சுற்றிட
என் நண்பர்கள் இல்லை . . .
என்னை கட்டித்தழுவிடும்
தலையணையும்
நான் முத்தமிடும்
என் கனவுகளும் இங்கில்லை . . .
நாள்தோறும் இயங்கும்
இயந்திரமாய் இங்கு நான் . . .
என்னுடன் யாரும் இல்லை
என்று நினைத்து நிமிரும் வேலையில் . . .
அன்று நான் என் வீட்டில்
பார்த்த அதே பொலிவுடன் துணைக்கு
என்னுடன் இங்கு வந்திருக்கும் நிலா . . . !!!!!!!
Saturday, 1 August 2015
ஒரு தலை காதல்
கூட்டத்தில் என் தோழிகளுடன்
குதூகலித்த என்னை. .
கை காட்டி . . இவள் தான் வேண்டுமென
என்னை அவன் கைகளில் ஏந்தினான். .
அவன் விரல்கள் இருக்கிய வேகத்தில்
உயிர் கரைய ஆரமித்தது. .
அவன் மார்பினில் சாய்ந்து
உலகை ரசிக்கும் வேலையில்
நான் உன்னை காதலிக்கிறேன்
என்றான் ஒருவளிடம்
என்னை அவன் மார்பிலிரிந்து
பிரித்து நீட்டிய வண்ணம். . .
சில நொடி வாழ்ந்து விட்டேன்
உன்னோடு இன்று என்று
அவன் கால்களுகிடையே
உதிர்ந்து உயிர் விடுத்தேன். . .
அவள் கைகளில் சேர விருப்பம் இல்லாமல். . !!
இப்படிக்கு
ரோஜா
Wednesday, 29 July 2015
Monday, 25 May 2015
Friday, 1 May 2015
திருநங்கைகளே-படித்ததில் பிடித்தது
மதிப்பு, மரியாதை
பரிதாபம், பாசம்
உங்கள்மேல் இருந்தாலும்....
அத்தனையையும் அழித்து விடுகிறீர்கள் !
ஆடவர்களை* உரசி
அதிகாரமாய்ப் பிச்சைக் கேட்கும்
அத்தனைத் தருணங்களிலும்.
திருநங்கைகளே !
தயவு செய்து வாங்கி விடாதீர்கள் ...
திருவோட்டு நங்கைகள் என்ற பட்டத்தை ?? :-(
* குறிப்பாக கல்லூரி மற்றும் பதின்வயது இளைஞர்கள்.
Wednesday, 22 April 2015
முதல் முத்தம்
சிந்தும் வார்த்தைகள் . . .
அக்கரையை வெளிபடுத்தும்
செல்ல கோவங்கள் . . .
செவிகளுக்கு
ரசித்து எழுதிய
கவிதைகள் . . .
தேனை
சுவைக்கும் காதல்
கிசுகிசுக்கள் . . .
ஊடலை தூண்டும்
சினிமா விமர்சனங்கள் . . .
வெறுத்திட வைத்திடும்
வியர்வை பிடியின் உச்சமாயினும்
பேசுங்கின்ற குரலில்
தென்றலை அள்ளி வீசும்
உணர்வு மிகுந்த தருணங்கள் . . .
இவையாவும்
அவனுக்காய்
நான் செய்திட . . .
எனக்காய்
அவன் செய்திட . . .
உணர்வுகளும்
என் காதலும்
என்னை பிச்சு தின்று . . .
அவனுக்காய்
நான் பதித்த
என் முதல் முத்தம்
ஊடக வடிவில்
அனுபவித்ததெனவொ
என் கைபேசி தான் . . . !!!!
நான் செய்திட . . .
எனக்காய்
அவன் செய்திட . . .
உணர்வுகளும்
என் காதலும்
என்னை பிச்சு தின்று . . .
அவனுக்காய்
நான் பதித்த
என் முதல் முத்தம்
ஊடக வடிவில்
அனுபவித்ததெனவொ
என் கைபேசி தான் . . . !!!!
Wednesday, 25 March 2015
Thursday, 12 March 2015
Wednesday, 25 February 2015
பெண் மலரே - படித்ததில் பிடித்தது

சோற்றுப்பருக்கைச் செல்லமாய்ச்சிதைத்து - அதோடு
பசும்பால் தோய்த்து - விரலால்
ஊட்டுவாள் - அம்மா
பழங்களின் தோலுரித்து - அதைப்
பொடியாய் நறுக்கி - நசுக்கி
ஊட்டுவார் - அப்பா.
சாப்பிடுவது எதுவாயினும் - அதை
சத்தமில்லாமலெடுத்து - நாவால் ஊதி
ஊட்டுவார் - தாத்தா.
ரொட்டித்துண்டை நீரில் நனைத்து
அதனை அமுக்கி - குழைத்து
ஊட்டுவான் - அண்ணன்.
போதும் உறவுகளே !
இனியும் அவளுக்கு
ஊட்டி விடாதீர்கள்.
வல்லூறுகள் வல்லுறவுக் கொள்ளத்
துடிக்கும் தேசத்தில் - அவள்
தனியாகத்தான் வேட்டையாட வேண்டியிருக்கிறது - ஆதலால்
அவளுக்கு உண்ணக் கற்றுக்கொடுங்கள்;
ஊட்டி விடாதீர்கள்.
ரொட்டித்துண்டை நீரில் நனைத்து
அதனை அமுக்கி - குழைத்து
ஊட்டுவான் - அண்ணன்.
போதும் உறவுகளே !
இனியும் அவளுக்கு
ஊட்டி விடாதீர்கள்.
வல்லூறுகள் வல்லுறவுக் கொள்ளத்
துடிக்கும் தேசத்தில் - அவள்
தனியாகத்தான் வேட்டையாட வேண்டியிருக்கிறது - ஆதலால்
அவளுக்கு உண்ணக் கற்றுக்கொடுங்கள்;
ஊட்டி விடாதீர்கள்.
Thursday, 19 February 2015
Sunday, 1 February 2015
திரும்பி வரும் வரை
வீட்டிற்குள் நுழைந்தாலே
மனதை பிசையும் நியாபகங்கள் . . .
கலைந்து கிடைக்கும் பொருள்களில்
சமையல் பாத்திரங்களில்
மீதமிருக்கும் விரல் தடயங்களில் . . .
என்னதான் துவைத்தாலும்
சட்டையின் காலரில்
அழுக்கு போகத்தான் மறுக்கிறது . . .
தானே செய்யும் சமையலில்
உப்போ காரமோ அதிகமாவது
தவிர்க்கவே முடியவில்லை . . .
தூக்கமில்லா இரவுகளில்
நிலா பொம்மையும்
வாங்கி தந்த முதல் சேலையும்
பக்கத்தில் ஆறுதல் சொல்வது
தினசரி வாடிக்கையாகி விட்டது . . .
பிரியமானவர்களின் விசாரிப்பில்
"ஊருக்கு போயிருக்கிறா " என்பது
உதடுகளுக்கு பழக்கமாகி விட்டது . . .
இப்போதெலாம் கைபேசியின்
உரையாடல்களில்தான்
அன்பு தொடர்கிறது . . .
உள்ளங்கையில் ஏந்தியபடி
சிணுங்கும் குழந்தையின்
ரோஜாநிற உதடுகளுக்கு
கண்ணீரோடு முத்தமிடும்
அந்த அற்புத நிமிஷங்களுக்காக
சிலதை சகித்து கொள்ளத்தான்
வேண்டும் . . .
-பிரசவத்திற்கு போன மனைவி
திரும்பி வரும் வரை -
Thursday, 22 January 2015
என் காதல்
சுற்றுகின்ற உன்னை
சுற்றி சுற்றி
வருகின்றேன் நித்தமும் . . .
பகலினில் கள்வனாய்
இரவில் காதலியாய் . . .
மலரின் வாசனையை
அறியாமல் கடத்தும்
காற்றை போல் . . .
இதயத்தை அறியாமல்
கவர்ந்த கள்வன் நீ . . .
திருடியது நீ
தண்டனை எனக்கல்லவோ . . .
என்னை அனுமதிக்காத நீ
உன் தேகம் தீண்ட
காற்றை மட்டும்
ஏன் அனுமதிக்கிறாய் ????
கோடி தலைகளுக்கு
அடைக்கலம் தருகிற உனக்கு
என்னை திரும்பி பார்த்திட
நேரமில்லையா ????
நீ திரும்பி
பார்த்திடும் ஒரு பார்வைக்காக
யுகமாக நான் நிலுவையில் . . .
நூற்றாண்டாய் என் காதலோடு
காத்திருக்கும் என்னை
நீ கைபிடிக்கும் வேலையை எண்ணி
இன்றும் இந்த இரவில்
வெளியே நான் . . . !!!!
-நிலாவின் காதல்
பூமியின் மீது -
Subscribe to:
Posts (Atom)











