
அந்தி மாலை மஞ்சளும் . .
போய் வருகிறேன் என்பதை போல
மேகங்களிடையே மறையும் சூரியனும் . .
குழந்தைகளின் ஆட்டமும் . .
குடும்பத்தினரின் கூச்சலும் . .
பாத்து விளையாடு என்கிற அம்மாவின் அக்கறையும் . .
அன்றாடப் பிழைப்புக்காக
தன்னால் முடிந்ததை செய்து
விற்கும் விற்பனையாளர்களும் . .
சம்பாதிக்க சோம்பேறித்தனம் கொண்டு
சுயமரியாதையை விற்று
யாசகம் கேட்கும் மானிடர்களும் . .
நண்பர்களோடு புகைப்படங்களும் . .
பேசிட தனிமை கிடைத்ததென
வார்த்தைகளுக்குள் சிக்கிக்கொள்ளும்
நட்பைத் தாண்டிய உறவுகளும் . .
இவர்களினிடையே . .
யாருக்கும் புரியா வண்ணம்
தங்களது மொழியில்
உரையாடல் . .
உரசிச் செல்லும் காதலன். .
காதலனின் தீண்டலில்
மெய்சிலிர்த்து
மற்றுமொரு தீண்டலுக்கு காத்திருக்கும்
காதலியென . .
இவர்களின் காதலை
யாவரும் பார்த்து ரசிக்க
தினமும் போகிறது இந்த அந்திப்பொழுது. .
இந்த காதலரின்
காதல் மொழிக்கும். . தீண்டல்களுக்கும் . .
எதிர்ப்பு இவ்வுலகில் இல்லை . .
.
.
.
.
.
.
@கடலும் மணலும் @
