Wednesday, 25 February 2015

பெண் மலரே - படித்ததில் பிடித்தது





சோற்றுப்பருக்கைச் செல்லமாய்ச்சிதைத்து - அதோடு

பசும்பால் தோய்த்து - விரலால்

ஊட்டுவாள் - அம்மா



ழங்களின் தோலுரித்து - அதைப்

பொடியாய் நறுக்கி - நசுக்கி

ஊட்டுவார் - அப்பா.


சா
ப்பிடுவது எதுவாயினும் - அதை

சத்தமில்லாமலெடுத்து - நாவால் ஊதி

ஊட்டுவார் - தாத்தா.


ரொட்டித்துண்டை நீரில் நனைத்து

அதனை அமுக்கி - குழைத்து

ஊட்டுவான் - அண்ணன்.



போதும் உறவுகளே !

இனியும் அவளுக்கு

ஊட்டி விடாதீர்கள்.



ல்லூறுகள் வல்லுறவுக் கொள்ளத்

துடிக்கும் தேசத்தில் - அவள்

தனியாகத்தான் வேட்டையாட வேண்டியிருக்கிறது - ஆதலால்

அவளுக்கு உண்ணக் கற்றுக்கொடுங்கள்;

ஊட்டி விடாதீர்கள்.

Thursday, 19 February 2015

அரசியல்வாதி


malai kavithai


வானம் கடையடைப்பு . . .


மலைக்கல் வீச்சு . . .

மின்னல் வெட்டு . . .


மேகக்கலவரம் . . .


\அப்பாவி உழவர் தலையில்

"இடிகுண்டு " வீச்சு . . .


ஊடகங்களின்

ஓயாத எச்சரிக்கை . . .

"மக்கள்  பாதுகாப்பான

இடங்களுக்கு செல்லவும் "


சந்தேகமில்லை

வானமும் "அரசியல்வாதி " தான் !!!!

Sunday, 1 February 2015

திரும்பி வரும் வரை


kavithai



வீட்டிற்குள் நுழைந்தாலே

மனதை பிசையும் நியாபகங்கள் . . .


லைந்து கிடைக்கும் பொருள்களில்

சமையல் பாத்திரங்களில்

மீதமிருக்கும் விரல் தடயங்களில் . . .


ன்னதான் துவைத்தாலும்

சட்டையின்  காலரில்

அழுக்கு  போகத்தான் மறுக்கிறது . . .


தானே செய்யும் சமையலில்

உப்போ காரமோ அதிகமாவது

தவிர்க்கவே முடியவில்லை . . .


தூக்கமில்லா இரவுகளில்

நிலா பொம்மையும்

வாங்கி தந்த  முதல் சேலையும்

பக்கத்தில் ஆறுதல்  சொல்வது

தினசரி வாடிக்கையாகி விட்டது . . .


பிரியமானவர்களின் விசாரிப்பில்

"ஊருக்கு  போயிருக்கிறா " என்பது

உதடுகளுக்கு பழக்கமாகி விட்டது . . .


ப்போதெலாம் கைபேசியின்

உரையாடல்களில்தான்

அன்பு  தொடர்கிறது . . .


ள்ளங்கையில் ஏந்தியபடி

சிணுங்கும் குழந்தையின்

ரோஜாநிற உதடுகளுக்கு

கண்ணீரோடு முத்தமிடும்

அந்த அற்புத நிமிஷங்களுக்காக

சிலதை சகித்து கொள்ளத்தான்

வேண்டும் . . .


-பிரசவத்திற்கு  போன மனைவி 

திரும்பி வரும் வரை -