Thursday, 17 March 2016

கடற்கரை காதலர்கள்



ந்தி மாலை மஞ்சளும் . .

போய் வருகிறேன் என்பதை போல

மேகங்களிடையே மறையும் சூரியனும் . .

குழந்தைகளின் ஆட்டமும் . .

குடும்பத்தினரின் கூச்சலும் . .

பாத்து விளையாடு என்கிற அம்மாவின் அக்கறையும் . .

ன்றாடப் பிழைப்புக்காக

ன்னால் முடிந்ததை செய்து

விற்கும் விற்பனையாளர்களும் . .

ம்பாதிக்க சோம்பேறித்தனம் கொண்டு

சுயமரியாதையை விற்று

யாசகம் கேட்கும் மானிடர்களும் . .

ண்பர்களோடு புகைப்படங்களும் . .

பேசிட தனிமை கிடைத்ததென

வார்த்தைகளுக்குள் சிக்கிக்கொள்ளும்

ட்பைத்  தாண்டிய உறவுகளும் . .

வர்களினிடையே . .

யாருக்கும் புரியா வண்ணம்

ங்களது மொழியில்

ரையாடல் . .

ரசிச் செல்லும் காதலன். .

காதலனின் தீண்டலில்

மெய்சிலிர்த்து

ற்றுமொரு தீண்டலுக்கு காத்திருக்கும்

காதலியென . .

வர்களின் காதலை

யாவரும் பார்த்து ரசிக்க

தினமும் போகிறது இந்த அந்திப்பொழுது. .

ந்த காதலரின்

காதல் மொழிக்கும். . தீண்டல்களுக்கும் . .

திர்ப்பு இவ்வுலகில் இல்லை . .


.

.

.

.

.

.

@கடலும் மணலும் @