Thursday, 22 January 2015

என் காதல்


kavithai




சுற்றுகின்ற உன்னை 

சுற்றி சுற்றி 

வருகின்றேன் நித்தமும் . . .


கலினில் கள்வனாய் 

இரவில் காதலியாய் . . .


லரின் வாசனையை 

அறியாமல் கடத்தும் 

காற்றை போல் . . .

இதயத்தை அறியாமல் 

கவர்ந்த கள்வன் நீ . . .


திருடியது நீ 

தண்டனை எனக்கல்லவோ . . .


ன்னை அனுமதிக்காத நீ 

உன் தேகம்  தீண்ட 

காற்றை மட்டும் 

ஏன் அனுமதிக்கிறாய் ????


கோடி தலைகளுக்கு 

அடைக்கலம் தருகிற உனக்கு 

என்னை திரும்பி பார்த்திட 

நேரமில்லையா ????


நீ  திரும்பி 

பார்த்திடும் ஒரு பார்வைக்காக 

யுகமாக நான் நிலுவையில் . . .


நூற்றாண்டாய் என் காதலோடு 

காத்திருக்கும் என்னை 

நீ  கைபிடிக்கும் வேலையை எண்ணி 

இன்றும் இந்த இரவில் 

வெளியே நான் . . .  !!!!



-நிலாவின் காதல் 

பூமியின் மீது -