தினமும் காலையில்
கண் விழித்திடும் வேளையில்
உணர்ந்திடும் சோம்பல் நீ தான் . .!
பேருந்திற்கு நடக்கும் பாதையில்
தினமும் பார்த்திடும்
மழலை சிரிப்பு நீ தான் . . !
செவிசிறையினில் அகப்பட்டு
முழங்கிடும் அத்தனை
பாடல் வரிகளின்
அர்த்தமும் நீ தான் . . !
மயிரிழையினை உரசி
தேகம் சிலிர்த்திடும்
தென்றல் காற்றும் நீ தான் . . !
அடைமழை முன்பு
எழும் மண்வாசனை
நினைவு கூர்வது நீ தான் . . !
கடல் அலைகளின் ஆரவாரத்தை
தூரம் நின்று ரசித்திடும்
அந்திமாலை சூரியனும் நீ தான் . . !
கண் அசரும் இரவுவேளை
நினைவுகளால் கட்டி அணைக்கப்படும்
என் தலையணையும் நீ தான் . . !
கேளியில் புன்னகையாகவும்
நீ இல்லா வேளையில் கண்ணீராகவும்
வெளிப்படுவது நீ தான் . . !
என் பெண்மையை உணரச்செய்யும் நளினமும்
என் பெண்மையால் வெளிப்படும்
நாணமும் நீ தான் . . !
நான் எழுதும் கவிதையில்
எழும் கற்பனை
யாவும் நீ தான் . . !
பொறித்திடும் நாட்குறிப்பில்
எழுதும் வார்த்தைகளில்
நினைவு கூர்வும் நினைவுகளில்
என்று யாவிலும் நீ தான் . .
நீ தான் . . !
