Saturday, 11 October 2014

ரசனை!!!


kavithai

னது சிறிய அறையில்

ன்னை ஏந்தி கொண்டிருக்கும்

மெத்தையிடம் பொறமை கொண்டு .....

சிறிய விடியல்

விளக்குகளின் வெளிச்சத்தில்

நீ
உறங்கும் அழகை

ன்னல் வழியே

சித்து கொண்டிருக்கும்

நிலாவை எந்த

காவலாளி கொண்டு பிடித்து

ந்த சிறையில் அடைப்பேன் .....!!!!!

Tuesday, 7 October 2014

கிணற்று தவளைகள் -ஒரு முன்னேறா கிராமம்

வயல்வெளி காற்றும் கால் எடுக்கும் இடமெல்லாம் கிணற்று நீரென

பசுமையுடன் காட்சி அளிக்கும் எனது அம்மாவின் சொந்த ஊரான

"அத்திவெட்டி "என்னும் கிராமத்திற்கு மாமா பையனின் நிச்சயத்திற்கு

வெகு நாட்களுக்கு பின் சென்று இருந்தேன் .செல்லும் இடமெல்லாம்

நல்லா இருக்கியா ,என்ன படிக்கிறேனு பாசமாய் கேட்கும் பாட்டி தாத்தா

மாமா மாமி சித்தி சித்தப்பா என மண் மனம் மாறா கிராமத்து பாசம்

என்னை பிரமிக்க வைத்தது .





லாங் சுடி அணிந்து சென்ற என்னை ,ஒரு பாட்டி புடவை கட்டி 

வரகூடாதா,என்ன இது துணி என்று ஆச்சரிய பார்வையை வைத்தார்.

இதுதான் சுடிதார் ,தற்காலத்து நாகரீக உடை என்று அவருக்கு புரிய 

வைபதற்குள் அப்பாட என்றாகி விட்டது . 



சுற்றி தென்னை மரங்களும் பனை மரங்களும் அதற்கிடையே ஒரு 

பெரிய   மாடி வீடு .அதுதான் என் அம்மாவின் பிறந்த இடமாம் .என் 

அம்மா பிறக்கையில் ஒரு குடிசையும் அதற்கு பக்கத்தில் ஒரு 

எலுமிச்சை கன்றென நான் வாழ்ந்த இடம் என எனதம்மா

 பெருமூச்சு விட்டார் .


காலையில் வந்து சேர்ந்த நாங்கள் சூரியன் மறையும் அளவில் கூட

எல்லா சொந்தங்களையும் பார்த்து முடித்த பாடில்லை.பின்பு கிளம்பி

மண்டபத்திற்கு சென்றோம் .அங்கு எனது டிஜிட்டல் காமெராவில்

எல்லாரையும் போட்டோ எடுத்தேன் .என் வயதிற்கேற்ற எனது 

மற்றொரு      மாமன் மகள் என் அக்கா என ஒன்றுகூடி கதைகள் 

பேசினோம் .


சாப்பிட்டு கிளம்பி ஒருவழியாக வீடு வந்து சேர்ந்தோம் .டிஜிட்டல் 

கமெராவில் இருந்த புகைப்படங்களை usb-யின் மூலம் லேப்டாப் -இற்கு

மாற்றி அம்மா அக்கவென என எல்லாவற்றிடம் எடுத்து சென்று

காட்டினேன் .அப்பொழுது அங்கிருந்த பாட்டி எனது அத்தை என

அனைவரும் இப்பொழுதுதானே படம் பிடித்தாய் அதற்குள் எப்படி இந்த

போட்டோ அந்த காமேரவிலிர்ந்து இந்த பொட்டிக்கு வந்தது என்று

வினவினர் .



கேமராமென் அடுத்த வாரம் ஆகும் என்றான் .இவள் இந்து நிமிடத்தில்

காட்டி விட்டாலே எல்லா படங்களையும் என்று ஆச்சரிய பட்டனர் .

என்னவோ பெரிய மலையை சாய்த்த மாதிரி பாராட்டுகளை 

குவித்தனர்.



நவீன தொழில் நுட்பங்கள் மாறியதை உணராமல் இருக்கும் இந்த

கிராமவாசிகளை எண்ணி வருத்தம்தான் பட முடிந்தது.அவர்களுக்கு

இந்த லேப்டாப் என்றால் என்ன ,இதன் பயன்பாடுகள் என்னவென்று

விளக்கினேன் .


அதனை கேட்டு எல்லோரும் வாய்மேல் விரல் வைத்து என் 

அம்மாவிடம்,நல்லா படிக்க வைத்திருக்கிறாய் பெண்ணை என்றனர் .

இப்படி ஒன்றும் அறியா கூட்டு குருவிகளாக வாழும் மக்களையும் ,

எதிர்கால  சந்ததியினரையும் பார்க்க மனம் சற்றே கசந்தது .


இன்னும் முன்னேறாமல் வாழும் இந்த கிராமத்தின் கதிக்கு பதில்

இல்லையோ ?????

Monday, 29 September 2014

காதலர்கள் - கவிதை

kavithai

ட்ட  நடு இரவில்

யாருமில்லா வேளையில்

திருட்டு தனமாய்

ரு காதலர்களின்  சந்திப்பு. . .!!

வைகள்

ன்றுகொன்று பேசும்  அழகை

ண்விழித்து ரசிக்கிறது ஆந்தை . . .

கைகோர்த்து ஆடும்

காதலர்களின் உரசலில்

நானும் உடல்   சிலிர்த்தேன்

ந்த குளிர்ந்த இரவில்  . . .!!


-தென்றலும் மரங்களும் -

Monday, 15 September 2014

உதிர்ப்பவள் நீ -படித்ததில் பிடித்தது


                                     



ழை ஒதுங்கும் மாலை நேரத்தில்


மரத்தினடியில் நான் ஒதுங்க - நீ


விளையாட்டாய் ....


கிளை உலுக்கி உதிர்த்துவிட்டு போன


மழைத்துளிகளாய் ....


உன் நினைவுகள் !





உதிர்ப்பவள் நீ


நனைபவன் நான் !

Wednesday, 30 July 2014

மழை -படித்ததில் பிடித்தது


                                                          


என் முதல் காதல்

அவளோடு ….



யார் அவள்?



நானும் அறியேன்.


பெயர்?


சில வருடங்களுக்கு முன்பு தான் எனக்குத் தெரிந்தது .


ஊர்?


எங்கு வேண்டுமானாலும் இருப்பாளாம்.


அவளைப் பற்றி?


நிச்சயமாக, நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவள் தான்.


எப்படி அறிமுகமானாள் ?


மின்னல் ஒளியில் அவள் தெரிந்தாள் – என்


மனதை உடன் பறித்தாள்.


பார்ப்பதற்கு ?



தண்ணீர் முகம்


கூரிய முக்கு


அரை குறை உயரம்


அழகிய உதடு



உதடு கொண்டு என் தாகம் தீர்ப்பாள்

என் உள்ளத்தில் என்றும் அவள் வாழ்வாள்.



எவ்வளவு நாள் காதல்?


விவரம் தெரியும் முன்பிலிருந்தே.


உன் காதல் பரிசு?

முத்தம்.


அவள் பரிசு?

பதில் முத்தம்.



கைப்பேசி காதல்?


ஊரில் வசதி இல்லை.


பிறகு பேசிக்கொள்வது?

எப்போதாவதுதான்.



விளையாடுவீர்களா?

காகிதக் கப்பல் விடுவதுண்டு.



சத்தமிடுவாளா?

எக்கச்சக்கமாக.


கோபப்படுவாளா?

ம் ….. ம் …..



கோபப்படும் போது – சில சமயம்

கொலையும் செய்வாள்.


அது …. ? இது …..?

சீ …… சீ ….



அப்படியொன்றும் இல்லை.

அவள் புனிதம் கெட்டுவிடக்கூடாது – என்று

நான் புனிதம் காக்கிறேன்.


அவளை விட்டுப் பிரியும் பொழுது?

நான் படுத்துக் கொள்வேன் உடல்நிலை சரியில்லாமல் .




யாருக்கேனும் அவளைப் பிடிக்குமா?

குழந்தைகளுக்கு அவளைப் பிடிக்கும்

எனக்கும் தான்;



பெரியோர்களுக்கு அவள் கசக்கும்

என் பெற்றோருக்கும் தான்.


மாமனார் மாமியார் பார்த்ததுண்டா?
தூரத்திலிருந்து.


அவள் பார்த்ததுண்டா?

என்னைச் சந்திக்க வரும்பொழுது….



என்ன அவள் வருவதைப் பார்த்தால்
இவர்கள் கதவடைத்து விடுவார்கள்
ஜன்னல்கள் உட்பட.



அவளைப் பற்றி கவிதை எழுதியதுண்டா?
அவள் ஒரு கவிதை



அவளைப் பற்றி எழுதாதவன் கவிஞனில்லை.
அவளைப் பார்க்க வேண்டுமே?



ஜன்னல் திறந்து வையுங்கள் – உங்கள்
வாசல் வழி நடந்து போகலாம்.


எப்போது திருமணம்?
பொறுங்கள், மகனைக் கேட்டு சொல்கிறேன்.



மகனா?
இப்பொழுது அவன் தானே அவளைக் காதலிக்கிறான்.


என்ன?


அட, மழையைக் காதலிக்காத மழலை உண்டா?



நானும் காதலித்தேன் அவளை – என்


மழலைப் பருவத்தில்.

Wednesday, 16 July 2014

விடைபெறுகிறேன் !-படித்ததில் பிடித்தது






இன்று உனக்கும் எனக்கும் விவாகரத்து

நான் மட்டும் கண்ணீரோடு...
நீ என்றுமே பெருமிதத்தோடு.

வந்தேன். வசந்த நாளில் - உன்
வாசல் தேடி....
வாரி அணைத்து
வரவேற்பு செய்தாய்
விவாகரத்து விரைவில் என்று சொல்லாமலே !!

உன்னால் தானடி - என்
பெற்றோரை பிரிந்தேன்
உன்னால் தானடி - என்
உறவுகள் மறந்தேன்
உன்னால் தானடி - என்
கனவுகள் மலர்ந்தேன்
உன்னைத் தானடி
உண்மை சொல்லேன்?

திருமணத்தன்றே தப்பிக்கலாம் - என்று
நினைத்தேன்
உன் அழகால் என்னை
அடைத்து விட்டாயடி - என் நினைவை அன்றே
அழித்து விட்டாயடி

முதல் இரவு
உன்னுடன் உறங்காமலே ...
சில இரவு
உன்னோடு பேசாமலே...
பல இரவு
உன்னோட பாசத்திலே...

உறவுகள் பல தந்தாய்
உணர்வுகள் பல தந்தாய்
உரிமைகள் பல தந்தாய் - இன்று
"உதறிவிட்டு செல்" என்கிறாய் .

நான் ஆணென்று உணர்ந்ததும்
உன்னை மணந்த பின்பு தான்;
நான் நானென்று உணர்ந்ததும்
உன்னை மணந்த பின்பு தான்.

காதலைக் கற்று தந்தாய்
கவிதைகள் கற்று தந்தாய்
கல்வியைக் கற்று தந்தாய்
கலையையும் கற்று தந்தாய்
கடைசியில் ஏனடி கழட்டிவிட்டு செல்கிறாய்?

உன்னைச் சேர்ந்த ஒவ்வொரு நாளும்
உதிரம் உலையாய் கொதித்ததடி - இனி
உன்னைப் பிரியும் ஒவ்வொரு நாளும்
உதிரம் பணியை உறையுமடி

அப்படி என்னடி செய்துவிட்டேன் - படித்தேன்
உன்னைப் படித்தேன்
படிப்புக்கு தண்டனை பிரிவா?

முதல் முத்தம் தந்து என்னை நீ அழைத்தாய் - இதோ
இறுதி முத்தம் தந்து உன்னை நான் அழைக்கிறேன்
வந்துவிடு என் வாசல்தேடி
வரமாட்டாய் - நீ நிச்சயம்
வரமாட்டாய்
ஈழத்தைக் காக்க இந்தியன் வருவானா?

விடைபெறுகிறேன்...
உன் குழந்தையோடு - இல்லை இல்லை
நம் குழந்தையோடு.

ஏய்! கல்நெஞ்சக்காரி , இப்பொழுதாவது கூறடி
யாரடி வைத்தது - உனக்கு
"கல்லூரி" என்ற பெயரை....!!!

Thursday, 10 April 2014

மாத்தி யோசி


மேற்படிப்பிற்கு அமெரிக்கா 

அனுப்ப திட்டமிட்டு 

வாங்கிய ஏசியில் ,

படிக்காமல் முடங்கிய அண்ணா 

கொசு தொல்லையால் 

இப்போது புத்தகமும் கையுமாய் ....!




கிரைண்டர்  மிக்சி சத்தத்தில் 

நியூஸ் கேட்க முடியாமல் 

தடுமாறிய தாத்தா 

இப்போது நிம்மதியாக 

நீயுஸ் பேப்பரும் கையுமாய் ....!




எடை குறைக்க மிஷின் 

வாங்கி தர சொன்ன அம்மா ,

ஆட்டுகல் உபயோகத்தில் 

இப்போது கல்யாணமான "சிம்ரன் ".....!



பள்ளியிலிருந்து  வந்தவுடன் 

டிவியை ஆன் செய்து 

விடிய விடிய பார்க்கும் தங்கை 

இப்போது வகுப்பில் முதல் மாணவி ...!


அனைவரும் இரவில் விழித்திருப்பதால் 

எங்கள் ஏரியாவில் 

இல்லை திருட்டு பயம் ....!



கொசுவர்த்தியில் 

மூச்சு திணறிய நான் 

இப்போது சுகமாய் கொசு வலையில் ...!



இப்படி பல நல்லது செய்யும் 

மின்தடையை வெறுக்காதிங்க 

தடை நல்லது ......!!!!

Sunday, 6 April 2014

MOST MEMORABLE INCIDENT

என் வாழ்வில் நடந்த சுவாரிசயமான நிகழ்வு இது .

நான் பனிரெண்டாம் வகுப்பு படிக்கும் பொழுது விடுமுறைக்காக வீட்டுக்கு வந்து கொண்டிருந்த பொழுது பேருந்தில் பார்த்த ஒரு புது விதமான அனுபவம்.பேருந்து சரியும் அளவிற்கு கூட்டம் அந்த பேருந்தில்.ஒருத்தர் மூச்சு இன்னொருவர் மேல் படர முகம் சுழித்து நின்றுகொண்டிருந்தனர் யாவரும்.பேருந்து எங்கேனும் நிற்காத மூச்சு விட என்ற தவிப்பில் நான்.

நாமக்கல் பேருந்து நிலையத்தில் பேருந்து ஐந்து நிமிடம் நிற்பது வழக்கம்.அவ்வாறு நிற்கையில் எறும்பு சர வரிசையாக இறங்குவது போல் மக்கள் கூட்டம் பாதி அகன்றது .அமர இடம் கிடைத்து ஜன்னல் காற்றை
சுவாசித்த பொழுது தான் உயிர் பிறந்தது எனக்கு .எனது வியர்வையை தாங்கிய என் கைக்குட்டை, நீரில் நனைத்த  ஈரம்.கண் மூட போன பொழுது பயங்கரமான வாக்குவாத சத்தம் கேட்டு திரும்பினேன்.





ஒரு வயதான பாட்டிக்கும்,பார்க்க மிகவும் மாடர்ன் மற்றும் ஸ்டைல் ஆன கல்லூரி இளைஞனுக்கும் இடையே ஆன வாதம் அது.காலியான ஓர் இருக்கையில் யார் உக்கார்வது என்று இருவரும் தீவிரமாக சண்டையிட்டுகொண்டிருந்தனர்.அந்த பாட்டி முதலில் நான் தான் வந்தேன் நான் தான் அமர்வேன் என்றார் .
அந்த இளைஞன் நான்தான் அமர்வேன் என்றான்.முடிவில் வெற்றி பெற்றார் அந்த வயதான பாட்டி.இளைஞன் தோற்ற கோபத்தில் அந்த வயதான பாட்டியை ஆங்கிலத்தில்திட்டி தீர்த்தான்.

ஆங்கிலம் அந்த பாட்டிக்கு தெரியாது என்பதால்இப்டியா திட்டுவது என்ற கோபத்தில் நான்.அந்த பாட்டியை பார்க்கவே பரிதாபமாக இருந்தது எனக்கு .டிக்கெட் செக்கர் இடையில் பேருந்தில் ஏற எல்லோரையும் பரிசோதிக்க ஆரம்பித்தார். அப்பொழுது அந்த இளைஞன் தீவிரமாக அவர் டிக்கெட்டை தேடிய பொழுது கிடைக்கவில்லை.செக்கர் பாக்க descent.ஆ இருக்கீங்க டிக்கெட் எடுக்க மாடிங்களா தம்பி என்று
கேட்டுவிட்டு பேருந்திலிருந்துகீழிறங்கு என்றார். நான்வாங்கிய பொழுதுதான்அவரும் டிக்கெட் வாங்கினார்.எங்கேயோ தொலைத்து விட்டு இப்டி அவமானத்தை சந்திகிராரே என்று எனக்கு
சற்றுபாவமாக இருந்தது .பின் அந்த பாட்டி தம்பி என்றழைத்து, நீ டிக்கெட் வாங்கிசட்டை கைநுனியில் சட்டயோடு சுருட்டி வச்சியே என்றார்.

உடனேஅவன் தன் சட்டை மடிப்பை கீழிறக்க அதிலிருந்து வந்து விழுந்தது டிக்கெட் .பார்த்த உடன் நெகிழ்ந்து விட்டான். அந்த பாட்டியை நினைத்து .தவறு செய்துவிட்டோமே என்று வருந்தி அந்த பாட்டியிடம்
மண்டியிட்டு மன்னிப்பு கூறினான் .அந்த பாட்டி its OK my dear boy ...i
know English ..and i got GOLD MEDALIST in English literature..I know whatever U scolded so far...
அப்டின்னு சொன்னாங்க .எனக்கு பிரஷர் இருக்கு
ரொம்ப நேரம்நிக்க முடியாது அது நாலதான் உன்னட்ட சண்ட போட்டு உக்காந்தேன்னு சொன்னாங்க.வெக்கி தலை குனிந்தான் அந்த இளைஞன்.இதையெல்லாம் தூரமிருந்து பார்த்து ஒரு புது அனுபவத்தோடு உறங்கி போனேன் .