Sunday, 6 April 2014

MOST MEMORABLE INCIDENT

என் வாழ்வில் நடந்த சுவாரிசயமான நிகழ்வு இது .

நான் பனிரெண்டாம் வகுப்பு படிக்கும் பொழுது விடுமுறைக்காக வீட்டுக்கு வந்து கொண்டிருந்த பொழுது பேருந்தில் பார்த்த ஒரு புது விதமான அனுபவம்.பேருந்து சரியும் அளவிற்கு கூட்டம் அந்த பேருந்தில்.ஒருத்தர் மூச்சு இன்னொருவர் மேல் படர முகம் சுழித்து நின்றுகொண்டிருந்தனர் யாவரும்.பேருந்து எங்கேனும் நிற்காத மூச்சு விட என்ற தவிப்பில் நான்.

நாமக்கல் பேருந்து நிலையத்தில் பேருந்து ஐந்து நிமிடம் நிற்பது வழக்கம்.அவ்வாறு நிற்கையில் எறும்பு சர வரிசையாக இறங்குவது போல் மக்கள் கூட்டம் பாதி அகன்றது .அமர இடம் கிடைத்து ஜன்னல் காற்றை
சுவாசித்த பொழுது தான் உயிர் பிறந்தது எனக்கு .எனது வியர்வையை தாங்கிய என் கைக்குட்டை, நீரில் நனைத்த  ஈரம்.கண் மூட போன பொழுது பயங்கரமான வாக்குவாத சத்தம் கேட்டு திரும்பினேன்.





ஒரு வயதான பாட்டிக்கும்,பார்க்க மிகவும் மாடர்ன் மற்றும் ஸ்டைல் ஆன கல்லூரி இளைஞனுக்கும் இடையே ஆன வாதம் அது.காலியான ஓர் இருக்கையில் யார் உக்கார்வது என்று இருவரும் தீவிரமாக சண்டையிட்டுகொண்டிருந்தனர்.அந்த பாட்டி முதலில் நான் தான் வந்தேன் நான் தான் அமர்வேன் என்றார் .
அந்த இளைஞன் நான்தான் அமர்வேன் என்றான்.முடிவில் வெற்றி பெற்றார் அந்த வயதான பாட்டி.இளைஞன் தோற்ற கோபத்தில் அந்த வயதான பாட்டியை ஆங்கிலத்தில்திட்டி தீர்த்தான்.

ஆங்கிலம் அந்த பாட்டிக்கு தெரியாது என்பதால்இப்டியா திட்டுவது என்ற கோபத்தில் நான்.அந்த பாட்டியை பார்க்கவே பரிதாபமாக இருந்தது எனக்கு .டிக்கெட் செக்கர் இடையில் பேருந்தில் ஏற எல்லோரையும் பரிசோதிக்க ஆரம்பித்தார். அப்பொழுது அந்த இளைஞன் தீவிரமாக அவர் டிக்கெட்டை தேடிய பொழுது கிடைக்கவில்லை.செக்கர் பாக்க descent.ஆ இருக்கீங்க டிக்கெட் எடுக்க மாடிங்களா தம்பி என்று
கேட்டுவிட்டு பேருந்திலிருந்துகீழிறங்கு என்றார். நான்வாங்கிய பொழுதுதான்அவரும் டிக்கெட் வாங்கினார்.எங்கேயோ தொலைத்து விட்டு இப்டி அவமானத்தை சந்திகிராரே என்று எனக்கு
சற்றுபாவமாக இருந்தது .பின் அந்த பாட்டி தம்பி என்றழைத்து, நீ டிக்கெட் வாங்கிசட்டை கைநுனியில் சட்டயோடு சுருட்டி வச்சியே என்றார்.

உடனேஅவன் தன் சட்டை மடிப்பை கீழிறக்க அதிலிருந்து வந்து விழுந்தது டிக்கெட் .பார்த்த உடன் நெகிழ்ந்து விட்டான். அந்த பாட்டியை நினைத்து .தவறு செய்துவிட்டோமே என்று வருந்தி அந்த பாட்டியிடம்
மண்டியிட்டு மன்னிப்பு கூறினான் .அந்த பாட்டி its OK my dear boy ...i
know English ..and i got GOLD MEDALIST in English literature..I know whatever U scolded so far...
அப்டின்னு சொன்னாங்க .எனக்கு பிரஷர் இருக்கு
ரொம்ப நேரம்நிக்க முடியாது அது நாலதான் உன்னட்ட சண்ட போட்டு உக்காந்தேன்னு சொன்னாங்க.வெக்கி தலை குனிந்தான் அந்த இளைஞன்.இதையெல்லாம் தூரமிருந்து பார்த்து ஒரு புது அனுபவத்தோடு உறங்கி போனேன் .


5 comments: