Thursday, 30 November 2017

இரையான என் காதல்

நான் உனதல்ல 

நீ  எனதல்ல 

ஆயினும் ஏன் இந்த போராட்டம் . . . !!


வ்வொரு முறையும் 

உன் பெயரையே கிறுக்கி பழகிய 

என் பேனா நுனி சொல்லும் 

உன்  பெயரின் எழுத்துக்களை மனப்பாடமாய் . .!!


ன் தலையனை கணம் சொல்லும் 

தினம் இரவில்  நான் சிந்தும் 

கண்ணீரின் ஆழத்தை . .!!


நான் அல்லாமல் 

நீ மற்ற பெண்ணிடம் பேசும் தருவாயில் 

கோபத்தை பொறுக்க முடியாமல் 

இடிபடும் என் பற்கள் 

சொல்லும் ஓராயிரம் கதைகள் . .!!


ன் சுயமறியாதையை  விற்று 

ஒவ்வொரு சண்டையிலும் 

 வாக்குவாதங்களிலும்  

முதலில்  மன்றாடி 

உன்னை எனக்காய்  பெரும் தருணத்தில் 

கண்ணீர் மல்க துடிக்கும் 

என் உதடுகள் சொல்லும் 

அதுபோல் கடந்து வந்த 

ஆயிரம் தருணங்களை . .!!






ன் கை அசைவில் 

உன் கை காப்பு சிணுங்கயில் 

அது உன்னோடு ஒட்டி  உறவாடும் 

ஆணவத்தை கத்தி சொல்கிறது 

என்று பொறாமை கொள்ளும் 

என் மனதை எதை கொண்டு 

கட்டி போடுவது . .!!


முதல் முதலாய் 

அறியாமல் நீ என் ஸ்பரிசம் 

தொட்ட நொடி . .

கண் இமைக்கும் நொடிகளில் 

நீ பதித்த முதல் முத்தம் . .

உன்னுடன் நினைந்த முதல் மழை . .

முதல் காதல் பார்வை . .

கடல் அலையையும் காதலையும் 

ஒன்றாக ரசித்த நிமிடங்கள்  . .

கை பிடித்து ஒட்டி 

நடந்த மாலை வேளை . .

இதை நினைத்து பார்க்க 

தடையில்லை என் கனவுகளில் . .!!


காதல் உண்டு 

கனவுகள் உண்டு 

ஆசைகள் உண்டு 

எதிர்பார்ப்புகள் உண்டு 

உன்னோடு நான் வாழும் வாழ்க்கை 

மட்டும் இல்லை . .

ஏன் . .

ஜாதிகளோடு மூச்சை விடும் 

இந்த சராசரி மக்கள் கூட்டத்தில் 

என்னையும் திணித்து 

என் காதலை அதுக்கு இரையாக்கிய 

கடவுளை எந்த காவலாளி 

கொண்டு பிடித்து 

எந்த சிறையில் அடைப்பேன் . .!!

9 comments:

  1. One two and last mattum than padichan...super words super connection..best of luck.....Fulla padichitu comment pandran..

    ReplyDelete
  2. Marvellous ivalo unmaya solita antha paiyan earru nu solidu

    ReplyDelete
  3. Really awesome... Wonderful feeling...

    ReplyDelete
    Replies
    1. Omg..neeye paaratitana..nala dhan iruku pola apo..
      Thansk Mr.Baranidharan

      Delete
  4. This comment has been removed by the author.

    ReplyDelete