"அப்பா கிளம்பறேன்" . .
என்று பேருந்தின் ஜன்னல் வழியே
கை அசைத்து அவர் மறைந்த வேளை . .
அப்பா . . நீயும் வா என்று அலறி துடித்து . .
அம்மாவின் மடியிலிருந்து துள்ளி எழுந்து
கதறி அழுத மழலையின் ஆழ்ந்த அன்பு . .
நாளை எண்ணி கவலை கொண்டு . .
புலம்பலும் . .வாழ்க்கையின் கசப்பை பிணாற்றியபடி . .
கை நிறைய மாத்திரைகளை
விழுங்கும் பாட்டி . .
உலகமே இடிந்தாலும் . .
தனக்கென என்று வெறுமையில் . .
கைபேசியினில் கண் புதைத்தும் . .
செவியினுள்ளே இசையை பூட்டி சிறை வைத்தும் . .
சில பேர் . .
குழந்தைக்கு மூச்சடைக்கும்
அழுகையை நிறுத்த ஏதாவது செய்யேன் மா . .
என்று அக்கறையோடும் . . மனிதாபிமானத்தோடும் ஒருவர் . .
இந்த பேருந்து
எப்பொழுது போயி சேரும் . .
என்று நேரத்தை தொரத்தியபடி
மடிக்கணினியில் மூழ்கி
இயந்திர வாழ்க்கையில் பிணைப்பட்ட ஒருவர் . .
விடுமுறைக்காக ஏங்கிய நாட்களை கடந்து . .
இன்றைக்கு ஆசைகளையும் ஆர்வத்தையும்
சுமந்து சென்று . .
விடுமுறைக்கு பின் . .
நினைவுகளை சுமந்து வரும்
இதேபோன்ற பயணத்தை எண்ணி கவலையில் நான் . .
ஒவ்வொரு பேருந்தும்
சுமப்பது மனிதர்களை மட்டும் அல்ல . .
பல மனதிர்களின் என்ன ஓட்டங்களையும்
நினைவுகளையும் தான் . . !!!!

Sema d
ReplyDeleteArumai ji
ReplyDeleteArumai ji
ReplyDelete