விடியற்காலை..!
மாடுகளின் மணிச்சத்தம்...
தொலைவில் யாரோ பெருக்கிக்கொண்டிருக்கும்
சரக்..சரக்..
எரியாத தெருவிளக்கின்
மினுக்..மினுக்...
உதிர்ந்துகிடக்கும்
பவழமல்லி...
தேநீர்வாளியுடன்
முண்டாசுத்தாத்தா..
மிளகுப்பொங்கல்கையுடன்
நண்டுசிண்டுகள்
தாழ்வாகப்பறந்துசெல்லும்
காகங்களின் சிறகொலி...
தூரத்தேயொலிக்கும்
கற்பனையென்றாலும் கற்சிலையென்றாலும்..
ஆம்!
விடியற்காலை அழகுதான்!
மார்கழிமாதவிடியற்காலைமட்டும்
பேரழகு!

Peralagu vidiyarkalai .... Peralagu ji
ReplyDelete